ஞாயிறு, 4 மார்ச், 2012

வீரமாருதி கம்பீரமாருதி

வீர மாருதி கம்பீர மாருதி
தீர மாருதி அதி தீர மாருதி
கீத மாருதி சங்கீத மாருதி
தூத மாருதி ராம மாருதி
தாச மாருதி ராம தாச மாருதி

வீடியோ 

சனி, 3 மார்ச், 2012

சண்முக சண்முக

சண்முக சண்முக சரவண பவனே
கந்தா குமரா கதிர்வேலவனே (சண்முக)
வரம் தருவாய் வடிவேலவனே
வண்ணமயில் வாகனனே
ஓம்கார தத்துவனே (சண்முக)

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

கரும்பு வாங்கலையோ

கரும்பு வாங்கலையோ ராமநாம கரும்பு வாங்கலையோ
கரும்பு வாங்கலாமே ராமநாம கரும்பு வாங்கலாமே

அயோத்தியில் முளைத்த கரும்பு
தசரதற்கு வாய்த்த கரும்பு
கோசலை குமாரன் கரும்பு
ராமகரும்பு சீதாகரும்பு
சீதா கரும்பு ராமகரும்பு (கரும்பு)

கோதண்ட வில்லை வளைத்த கரும்பு
கூனி முதுகை நிமிர்த்த கரும்பு
தவமுனிவர் சொல்லைக் கேட்டு
தாடகையை எய்த கரும்பு
ராமகரும்பு சீதாகரும்பு
சீதா கரும்பு ராமகரும்பு (கரும்பு)

அகலிகை சாபம் தீர்த்த கரும்பு
மிதிலை நகரம் சென்ற கரும்பு
ஜனகர் வில்லை ஒடித்த கரும்பு
ஜானகியை மணந்த கரும்பு
ராமகரும்பு சீதாகரும்பு
சீதா கரும்பு ராமகரும்பு (கரும்பு)

கரும வினையை அகலச் செய்து
கருணைமுகமாய் விளங்கும் கரும்பு
பக்தர்களைக் காக்கும் கரும்பு
பரமபதம் சோ்க்கும் கரும்பு
ராமகரும்பு சீதாகரும்பு
சீதா கரும்பு ராமகரும்பு (கரும்பு)